» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் 32 ஏக்கர் பரப்பளவில் பல்லுயிர் பூங்கா

செவ்வாய் 30, மே 2023 7:59:19 PM (IST)



தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் 32 ஏக்கர் பரப்பளவிலான பல்லுயிர் பூங்கா உருவாக்க அடிக்கல் நாட்டப்பட்டது. 

தாமிர உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலை சர்வதேச பல்லுயிர் பெருக்க தினத்தை முன்னிட்டும், அதன் 2023 ஆம் ஆண்டிற்கான நோக்கமாக "பல்லுயிர் பெருக்கத்தை மீண்டும் உருவாக்குதல்" என்ற சர்வதேச இலக்கை மெய்ப்பிக்கும் வகையில் "முத்து நகர் பல்லுயிர் பூங்கா" திட்டத்திற்கான அடிக்கல்லை நாட்டியது.

இந்த அடிக்கல் நாட்டும் விழாவிற்கு தமிழ் நாட்டின் காடுகளின் மனிதர் என்று அழைக்கப்படும் சரவணன் தலைமை தாங்கினார். இவர் ஏற்கனவே புதுச்சேரிக்கு அருகில் 100 ஏக்கர் தரிசு நிலத்தை காடுகளாக மாற்றி, பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்குகளின் சரணாலயமாக மாற்றியுள்ளார் என்பது குறுப்பிடத்தக்கது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு தெற்கு சிலுக்கன்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் திரு.பால சுப்ரமணியன் மற்றும் சாமிநத்தம் பஞ்சாயத்தை சேர்ந்த திரு. நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த திட்டத்தின் முதற்கட்டமாக தமிழ் சங்க இலக்கியங்களில் குறிப்படப்பட்டிருக்கும் தாவரங்களை மீட்டெடுத்து ஒரு பூங்காவை உருவாக்குவது என திட்டமிடப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.மேலும் தமிழ்நாட்டில் முதன் முறையாக ஐந்திணைப் பூங்கா (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை) நிறுவப்படவுள்ளது. புவி வெப்பமயமாதலை தடுக்கும் டை-மெத்தில்-சல்பைடு என்ற ரசாயனத்தை காற்றில் கலக்கும் பெரிய இலை மகோகனி மரங்களை நடுதல் முதற்கட்ட திட்டமாகும்.

அடுத்தகட்டமாக மூலிகைத் தோட்டம், அரிய வகை தாவரங்களை மீட்டெடுத்தல், நட்சத்திர வனம், மூங்கில் தோட்டம் மற்றும் இன்னும் பிற தனித்துவமான பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்த உள்ளது.
மேலும் சரணவன் அவர்கள், ஆலை ஊழியர்களிடம் காடுகள் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தின் அவசியத்தை எடுத்துரைத்தார். 

ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுமதி பேசுகையில், ”இந்த பல்லுயிர் பூங்கா தூத்துக்குடி மற்றும் தமிழ்நாட்டின் பெருமையாக விளங்கும் என்றும், இந்த ஆலை ஆரம்பித்த நாள் முதல் திருவைகுண்டம் பகுதிகளில் காலவாய்களை புணரமைத்தல், கிராமப்புறங்களில் உள்ள குளங்களைத் தூர்வாறுதல் போன்ற பணிகளின் மூலம் மக்களின் வாழ்வாதாரத்திற்கும், பல்லுயிர் பெருக்கத்திற்கும் சேவை செய்துவருகிறது” என்று குறிப்பிட்டார்.

பசுமை தூத்துக்குடி என்ற திட்டம் 2019 ஆம் ஆண்டு 10 லட்சம் மரங்கள் நடும்s திட்டத்தை முன்னெடுத்து 1.25 இலட்சத்தை அடைந்துள்ளது. இந்த பத்து லட்சம் மரத்தை 4000 ஏக்கர் நிலத்தில் நடுவதன் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தின் காடுகளின் பரப்பளவு 5.25 சதவீதத்தில் இருந்து 14.0 சதவீதமாக வளர்ச்சி அடையும்.

ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனமானது தூத்துக்குடியில் உள்ள 403 கிராம பஞ்சாயத்துகளில் 35% காடுகளை உருவாக்க தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், கிராமப் பஞ்சாயத்து அமைப்புகள் கீழ்கண்ட அலைபேசி எண்ணிலோ, மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம் என்று ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து

RaymondJun 1, 2023 - 09:20:01 AM | Posted IP 172.7*****

ஸ்டெர்லைட் நிறுவனம் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த நிறுவனத்தை அகற்றி விட்டு அவ்விடத்தில் சுற்றுச் சூழலுக்கு நன்மை பயக்கும் நிறுவனங்களை ஏன் நிறுவக் கூடாது.

ஜான்மே 31, 2023 - 02:21:53 PM | Posted IP 162.1*****

திருட்டு பமலுவ என்ன திருட்டுத்தனம் செய்தாலும் நச்சு ஆலை திறக்க முடியவே முடியாது

முட்டாள்மே 31, 2023 - 12:01:04 PM | Posted IP 162.1*****

அப்படியே ஸ்டெர்லைட்ல இடித்து தரைமட்டமாகி அங்குசுற்றி ஒரு லட்சம் மரங்களை நடவலாம்ல.

Bhuvanenthiran Sமே 31, 2023 - 11:53:26 AM | Posted IP 162.1*****

ஒன்றும் சொல்லி பயன் இல்லை எல்லோரும் நேர்மை இல்லாத மனிதர்கள் ஆகிவிட்டோம் பணத்துக்காக எதையும் சாப்பிட தயாராக இருக்கிறார்கள்

Muthuமே 31, 2023 - 11:23:05 AM | Posted IP 172.7*****

இன்று தான் Tuty online இவ்வளவு பெரிய செய்தி வாசிக்கிறேன்

MANITHANமே 31, 2023 - 10:29:16 AM | Posted IP 172.7*****

V Can Trust & All Can Trust தூத்துக்குடியில் ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு பாதுகாத்து வருகிறது.

Sakaமே 31, 2023 - 07:05:34 AM | Posted IP 172.7*****

Oh apdiay Pudukkottai palathin keal uppatru odail neengal kotiya ayiram load karupu kalvugalai agatre koramballam kulathuku sariaga neer pola seiyalamay

P.S. Rajமே 30, 2023 - 10:45:26 PM | Posted IP 172.7*****

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க மறைமுக அச்சாரமா !

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital

New Shape Tailors






Thoothukudi Business Directory