» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வேன் மீது மோட்டார் பைக் மோதல்: வாலிபர் பலி

சனி 27, மே 2023 8:29:25 AM (IST)

நாசரேத் அருகே வேன் மீது மோட்டார் பைக் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உள்ள வடலிவிளை மேலத்தெருவை சேர்ந்தவர் அர்ஜுனன். இவரது மகன் குமரன் (22). இவர் கேரளாவில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் தனது சொந்த ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்காக வந்திருந்தார்.

கடந்த 24-ந் தேதி இரவு வனத்திருப்பதி - இடையன்விளை பகுதியில் பைக்கில் சென்றபோது சாலை ஓரம் நிறுத்தி வைத்திருந்த வேன் மீது மோதி பைக் விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த குமரன் சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நாசரேத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital
Thoothukudi Business Directory