» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி ஜவுளிக்கடை ஊழியர்களுக்கு கொரானா தடுப்பு ஊசி முகாம்

புதன் 16, ஜூன் 2021 6:08:39 PM (IST)



பிரபல ஜவுளிக்கடை நிறுவனமான கே.சின்னத்துரை அன் கோ., வில் 102 ஊழியர்கள் கொரானா தடுப்பு ஊசி செலுத்திக் கொண்டனர்.

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் பரவி வருவதால் இதில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி, திருச்செந்தூர், ஏரல் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் பிரபல ஜவுளிக்கடை நிறுவனமான கே.சின்னத்துரை அன் கோ., வில் பணிபுரியும் ஊழியர்கள் 102 பேர் திருச்செந்தூரில் உள்ள அந்த நிறுவனத்தில் கொரானா தடுப்பு ஊசியான கோவிஷீல்டு போட்டுக்கொண்டனர். முகாமில் ஊழியர்கள் ஆர்வமுடன் முதற்கட்ட ஊசி போட்டுக்கொண்டனர்.  சிறப்பு தடுப்பு ஊசி முகாமை கே.சின்னத்துரை அன் கோ., உரிமையாளர்கள் எஸ். அரிராமகிருஷ்ணன், கே. திருநாவுக்கரசு ஆகியோர் துவக்கி வைத்தனர்.


மக்கள் கருத்து

PublicJun 17, 2021 - 12:59:22 AM | Posted IP 162.1*****

Tutyonline ... why your news headlines make thread ... change your headlines in positive way...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





New Shape Tailors


Arputham Hospital



Thoothukudi Business Directory