» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஆப்கானில் பெண்கள் கல்வி கற்க, வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர்: தலிபான்கள் தகவல்

திங்கள் 16, ஆகஸ்ட் 2021 5:09:29 PM (IST)



ஆப்கானில் பெண்கள் கல்வி கற்கவும் வேலைக்குச் செல்லவும் அனுமதிக்கப்படுவார்கள் என தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் சுகைல் ஷாகின் தெரிவித்துள்ளார்.

ஆப்கானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிபர் அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார். 

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்காவுக்கான தூதரக அதிகாரிகளும் வெளியேறியுள்ளனர். தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் ஆப்கானிஸ்தான் கொண்டு வரப்பட்டுள்ளதால் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில் தலிபான்களின் அடுத்த நடவடிக்கை குறித்து அவ்வமைப்பின் செய்தித் தொடர்பாளர் சுகைல் ஷாகின்ப் பிபிசி செய்தி நிறுவனத்துக்கு பதிலளித்திருக்கிறார். இதுகுறித்து சுகைல் ஷாகின் கூறும்போது, " மக்களின் உயிரும், சொத்துகளும் பாதுகாப்பாக இருக்கும். ஆப்கானிஸ்தான் மக்களை பழிவாங்க மாட்டோம். நாங்கள் மக்களின் சேவகர்கள். 

எங்களது தலைமை காபூலில் தொந்தரவுகள் ஏற்படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். நாங்கள் அமைதியான முறையில் எங்கள் அதிகாரத்தைப் பெற காத்துக் கொண்டிருக்கிறோம். எதிர்காலத்தில் அனைத்து ஆப்கான் மக்களும் பங்குகொள்ளும் ஆட்சியாக எங்கள் ஆட்சி அமையும். நாங்கள் இஸ்லாமிய அரசு அமைய விரும்புகிறோம். நாங்கள் பெண்கள் உரிமையை மதிப்போம். வெளியே தனியாக பெண்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். பெண்கள் கல்வி கற்கவும், வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் ஹிஜாப் அணியும் பழக்கத்தை கடைப்பிடிப்பார்கள் . ” என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory