» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இளம் எலிகளின் இரத்தத்தில் முதுமை தடுக்கும் கூறுகள்: சீன விஞ்ஞானிகள் சாதனை!

செவ்வாய் 7, மே 2024 8:57:38 AM (IST)

இளம் எலிகளின் இரத்தத்தில் இருந்து முதுமை ஏற்படாமல் தடுக்கும் (Anti-Aging) இரத்தக் கூறுகளை கண்டுபிடித்து சீன விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்னர்.

-உயிரினங்களின் ஆயுளை நீட்டிக்க உதவியாக இளம் எலிகளின் உடல் திரவங்களிலிருந்து பிரித்தெடுத்த இரத்தக் கூறுகளை வயதான எலிகள் மீது பயன்படுத்தி சீன விஞ்ஞானிகள் சோதனை செய்துள்ளனர். சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 20 மாத வயதான எலிகளின் ஆயுட்காலம் சுமார் 22.7% வரை நீட்டிக்க முடிந்ததாக சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.  

Nature Aging அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில்,  ஆண் எலிகளுக்கு இந்த இரத்தக் கூறுகளை வாராந்திர ஊசி மூலம் செலுத்தியதில், அவைகளின் சராசரி ஆயுட்காலம் 840 நாட்களிலிருந்து 1,031 நாட்களாக அதிகரிக்க முடிந்ததாக கூறப்பட்டுள்ளது. சுமார் 7 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு முடிவுகளை, மனிதர்களிடம் பயன்படுத்துவதற்கு முன்பு கூடுதல் ஆராய்ச்சி மற்றும் சோதனைகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital


Thoothukudi Business Directory