» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவில் 17 பேரை ஊசி போட்டு கொன்ற நர்சுக்கு 760 ஆண்டு சிறை: நீதிமன்றம் தீர்ப்பு!

திங்கள் 6, மே 2024 10:35:42 AM (IST)

அமெரிக்காவில் 17 பேரை ஊசி போட்டு கொன்ற நர்சுக்கு 760 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. 

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தை சேர்ந்தவர் ஹீதர் பிரஸ்டி (வயது 41). இவர் அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு மே மாதம் இவர் தான் பணி புரிந்த ஆஸ்பத்திரியில் சில நோயாளிகளுக்கு வேண்டும் என்றே தவறான ஊசி போட்டு 2 பேரை கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது அவர் கடந்த 2018 முதல் 2023 வரை 5-க்கும் மேற்பட்ட ஆஸ்பத்திரிகளில் பணியாற்றி இருக்கிறார். மேலும் சில முதியோர் காப்பகங்களிலும் அவர் பணியாற்றினார். அப்போது நீரிழிவு நோயாளிகளுக்கு அளவுக்கு அதிகமாக இன்சுலின் மருந்தை ஊசி மூலம் அவர் செலுத்தி உள்ளார். மேலும் நீரிழிவு நோய் இல்லாதவர்களுக்கு கூட அவர் அந்த ஊசியை செலுத்தி இருக்கிறார்.

இந்த இன்சுலின் மருந்தை ஒருவருக்கு அளவுக்கு அதிகமாக செலுத்தும்போது இதயத்துடிப்பு அதிகரித்து மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் 17 பேரை அவர் கொலை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கு விசாரணையில் இன்சுலின் மருந்தை வேண்டுமென்றே அளவுக்கு அதிகமாக செலுத்தி கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவருக்கு சுமார் 760 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory