» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இஸ்ரேல் உறவை முறித்துக் கொள்கிறோம் : கொலம்பியா அதிபர் பெட்ரோ அறிவிப்பு!

வியாழன் 2, மே 2024 11:23:58 AM (IST)

இஸ்ரேல் நாட்டுடனான உறவை முறித்துக் கொள்வதாக கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ அறிவித்துள்ளார்.

பொகோட்டாவில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர்கள் தின விழாவில் பங்கேற்ற பெட்ரோ, இனப்படுகொலை செய்யும் அரசுடனான தூதரக ரீதியிலான உறவை முறித்துக் கொள்வதாக தெரிவித்தார். மேலும், காஸாவில் நடைபெறும் மனித உரிமை மீறலை உலகம் வேடிக்கை பார்க்காது என்றும், அனைத்து நாடுகளும் தீவிர நிலைபாட்டை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

காஸா மீதான போர் தொடங்கியதில் இருந்தே இஸ்ரேலை கடுமையாக விமர்சித்து வரும் பெட்ரோ, கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரை நாஜிகளுடன் ஒப்பிட்டு கடுமையாக விமர்சித்திருந்தார்.அதிலிருந்து, இஸ்ரேல் - கொலம்பியா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில், கொலம்பியாவுக்கான பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதியை இஸ்ரேல் நிறுத்தியிருந்தது.

காஸாவில் கடந்த அக். 7 முதல் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 34,000-ஐ கடந்துள்ளது.பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்து வருவதாகவும், தாக்குதலை நிறுத்தக் கோரியும் இஸ்ரேலுக்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பாலஸ்தீனத்தை விடுவிக்கக் கோரி மாணவர்கள் ஈடுபட்டு வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

கடவுள் மக்கள்மே 2, 2024 - 04:51:35 PM | Posted IP 162.1*****

இஸ்ரயேலை யாராவது தாக்கினால் அதன் விளைவு 2 மடங்கு பயங்கரமாக இருக்கும்.

இந்தியன்மே 2, 2024 - 04:44:55 PM | Posted IP 162.1*****

12 ஆயிரத்துக்கு மேற்பட்ட ராக்கெட் வீசியும், அப்பாவி பொதுமக்களை கொன்றவர்களை மறந்து விட்டார்கள் மக்கள். போய் தொலை.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors

Arputham Hospital




CSC Computer Education



Thoothukudi Business Directory