» செய்திகள் - விளையாட்டு » உலகம்

துபாயில் கொட்டித் தீர்த்த கனமழை: விமானங்கள் சேவை பாதிப்பு

வியாழன் 2, மே 2024 5:10:27 PM (IST)

துபாயில் புயல் காரணமாக நேற்றிரவு மிதமான மழையாக பெய்த நிலையில், இன்று காலை முதல் கனமழையாக மாறி கொட்டித் தீர்த்தது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ) நாடுகளின் தலைநகர் துபாயில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னதாக கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் துபாய், அபுதாபி, ஷார்ஜா போன்ற நகரங்கள் மூழ்கின. சாலைகளில் வெள்ளநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது. இந்த வெள்ளப்பாதிப்பில் இருந்து ஓரளவு மீண்டு வந்துள்ள நிலையில், தற்போது மீண்டும் துபாயில் கனமழை பெய்தது.

துபாயில் நேற்றிரவு (மே 1) புயல் காரணமாக மிதமான மழையாக பெய்த நிலையில், காலை முதல் கனமழையாக மாறி கொட்டித்தீர்த்தது. இதனால் சர்வதேச விமான நிலையமான துபாய்க்கு வந்து செல்லும் விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. இதனால் துபாய்க்கு செல்லும் பயணிகள் அவதியடைந்துள்ளனர். மாறிவரும் பருவநிலை காரணமாக மழை இன்னும் அதிகரிக்கலாம் எனவும் எச்சரிக்கின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory