» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தென் ஆப்பிரிக்காவில் வன்முறை போராட்டம் தீவிரம் : உயிரிழப்பு 212 ஆக உயர்வு

சனி 17, ஜூலை 2021 3:44:00 PM (IST)தென் ஆப்பிரிக்காவில் வன்முறை, போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில் கடந்த ஒரு வாரத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜுமா சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து அங்கு போராட்டம், வன்முறை வெடித்தது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் ஆயுதங்களுடன் வன்முறைகளில் ஈடுபடுவதால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. மேலும் போராட்டங்களில் ஈடுபட்டவர்களில் 117 பேர் உயிரிழந்திருப்பதாகவும் பலர் படுகாயங்கள் அடைந்ததாகவும்  அந்நாட்டு அமைச்சர்  அறிவித்திருந்தார். தற்போது பலியானவர்களின்  எண்னிக்கை 212 ஆக உயர்ந்திருக்கிறது.

இதுகுறித்து அரசு தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட தகவலின் படி போராட்டம் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு வன்முறை களமாக  மாறியிருப்பதாக தெரிவித்தனர்.  இதுவரை  காவல்துறை 2500க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தும்  1480 வழக்குகளையும்  பதிவு செய்ததோடு தேடுதலில் பிடிபட்ட 2  முக்கிய குற்றாவளிகளிடமிருந்து 4000 சுற்றுகளைக் கொண்ட தோட்டாக்களும் உரிமம் பெறாத துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர். அரசு கலவரத்தை கட்டுப்படுத்த  மேலும் 25000 பாதுகாப்பு படையினரை நியமித்திருக்கிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

Thoothukudi Business Directory