தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு மற்றும் முறப்பநாடு பகுதிகளில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன்இன்று (14.10.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கிராமத்திலுள்ள தாமிரபரணி ஆற்றுப் படுகையினை மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, வல்லநாடு தாமிரபரணி ஆற்று மேம்பாலத்தின் உறுதித்தன்மை மற்றும் பராமரிப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், குடிநீர் விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் வல்லநாடு தலைமை நீரேற்று நிலையத்திற்குச் சென்று, அதன் செயல்பாடுகள் மற்றும் குடிநீர் விநியோக முறைகள் குறித்து அதிகாரிகளிடம் விரிவாகக் கேட்டறிந்தார்.

thamirabaraniCollector.jpg

முன்னதாக, வல்லநாடு அரசு மாதிரிப் பள்ளிக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர், அங்குள்ள மாணவ, மாணவியர் விடுதியின் செயல்பாடுகள், தூய்மைப் பராமரிப்பு மற்றும் உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து நேரில் ஆய்வு செய்து மாணவர்களிடம் கலந்துரையாடினார்.