தூத்துக்குடி தருவை மைதானத்தில் ஏழாவது புத்தகத் திருவிழா 2027 ஜனவரி 23-ஆம் தேதி முதல் பிப்ரவரி 2-ஆம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளப் பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் பிறப்பித்துள்ள செயல்முறை ஆணையின்படி, புத்தகத் திருவிழாவிற்கான நிதிசார்ந்த செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) கவனிப்பார். மேலும், விழா ஒருங்கிணைப்பு, விளம்பரப்படுத்துதல், போட்டிகள் நடத்துதல் உள்ளிட்ட செயல்பாடுகளை உதவி ஆட்சியர் (பயிற்சி) மற்றும் துணை ஆட்சியர் (பயிற்சி) இணைந்து செயல்படுத்துவார்கள். புத்தகத் திருவிழா முடியும் வரை ஒருங்கிணைப்புக் குழுக்களின் தினசரி செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக ஆலோசிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர் மட்ட அமைப்பு மற்றும் ஒருங்கிணைப்புக் குழு, வரவேற்புக் குழு, அழைப்பிதழ் குழு, விளம்பரக் குழு, அரங்கங்கள் தயாரிப்புக் குழு, கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டி ஒருங்கிணைப்புக் குழு, புகைப்படப் போட்டிக்குழு, நினைவுப் பரிசுக் குழு, தன்னார்வலர் ஒருங்கிணைப்புக் குழு, சிறப்பு விருந்தினர் அழைப்புக் குழு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைப்புக் குழு, போக்குவரத்து, தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் அவசர சிகிச்சை, துப்புரவு மற்றும் குடிநீர் வழங்குதல்,
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், நன்கொடையாளர் ஒருங்கிணைப்பு, மகளிர் திறன் வளர்ப்பு, மின் பகிர்மானம், விழிப்புணர்வு, உணவுப் பாதுகாப்பு, புத்தக வாசிப்பை ஊக்குவித்தல், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முன்னெச்சரிக்கை, நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குதல், விழா மேடை, மங்கல இசை, அலங்காரம் மற்றும் வரவு-செலவுக் குழுக்கள் என மொத்தம் 28 குழுக்களுக்குப் பொறுப்பு அலுவலர்கள் மற்றும் இணைந்து செயல்படும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

