ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்குத் தோழர் இரா. நல்லகண்ணு பெயர் சூட்டுவதாக 2024 டிசம்பரில் அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை உடனடியாகச் செயல்படுத்தக் கோரி அகில இந்திய கோழியர் இராச்சியம் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
விடுதலைப் போராட்ட வீரரும், மூத்த பொதுவுடைமைத் தலைவருமான அமரர் தோழர் இரா. நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி, அவர் பிறந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அவரது பெயர் சூட்டப்படும் எனத் தமிழக அரசு அறிவித்தது.
அறிவிப்பு வெளியாகிச் சுமார் இரண்டு ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையிலும், இன்னும் பெயர் சூட்டப்படாமலும் பெயர்ப்பலகை திறக்கப்படாமலும் உள்ளது. எளிய மக்கள் மற்றும் தாமிரபரணி நதி, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகப் பாடுபட்ட அவரது தியாகத்தைப் போற்றும் வகையில், ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்குத் தோழர் இரா. நல்லகண்ணு பெயர் சூட்டிப் பெயர்ப்பலகையை உடனடியாகத் திறக்க வேண்டும் என அகில இந்திய கோழியர் இராச்சியம் (தமிழ்நாடு) மாநிலத் தலைவர் பெ. ஆனந்தராஜ் கோழியர் சார்பில் முதலமைச்சர் தனிப்பிரிவு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. ஆகியோருக்குக் கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

