தூத்துக்குடி தாளமுத்து நகர் வெல்கம் நகர் பகுதியைச் சேர்ந்த சிவபெருமாள் மகன் ராஜ் (50) இவர் மீது தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கபு் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட எஸ்பி சிவபிரசாத் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் உத்தரவின் பேரில் ராஜ் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்கான உத்தரவு நகலை தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சொர்ண ராணி மூலம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்று வழங்கப்பட்டது.

