தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை, நவம்பர் 27) காலை 6.30 மணி முதல் இன்று (சனிக்கிழமை, நவம்பர் 28) காலை 6.30 மணி வரையிலான நிலவரப்படி பதிவான மழை அளவு மற்றும் சேத விவரங்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் உள்ள 69 மழைமானிகளில், இரட்டைப் பதிவுகள் நீக்கப்பட்டு 64 மழைமானிகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட மாவட்ட சராசரி மழையளவு 3.57 மி.மீ. ஆகும். இதில் 34 மழைமானிகளில் மழை பதிவாகியுள்ளது.
வட்ட வாரியாகப் பதிவான சராசரி மற்றும் அதிகபட்ச மழையளவு விவரங்கள்: ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் சராசரியாக 11.20 மி.மீ. (அதிகபட்சம்: சேதுங்கநல்லூர் - 18.4 மி.மீ., வல்லநாடு - 18.0 மி.மீ.), கோவில்பட்டி வட்டத்தில் 5.92 மி.மீ. திருச்செந்தூர் வட்டத்தில் 4.81 மி.மீ. விளாத்திகுளம் வட்டத்தில் 4.12 மி.மீ. ஒட்டப்பிடாரம் வட்டத்தில் 3.71 மி.மீ., எட்டயபுரம் வட்டத்தில் 2.00 மி.மீ. கயத்தாறு வட்டத்தில் 1.40 மி.மீ. மற்றும் சாத்தான்குளம் வட்டத்தில் 0.80 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

