தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புதூர் அருகே உள்ள சத்திரப்பட்டி மேலத்தெருவைச் சேர்ந்த மருதையா மகன் மாரியப்பன் (35). இவரது தாய் மற்றும் தந்தை ஏற்கெனவே உயிரிழந்து விட்டனர். மேலும், 9 ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவியைக் கொலை செய்த வழக்கில் தொடர்புடையவர் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலை வீட்டில் இருந்த மின்விசிறி மாட்டும் கம்பியில் நைலான் கயிற்றால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாலாட்டின்புதூர் போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.