திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் மீண்டும் உத்தரவு பிறப்பித்ததையொட்டி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகில் திரண்டனர். அங்கு அவர்கள் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் நிகழ்வில் பங்கேற்கவும், தீப தரிசனம் செய்யவும் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகில் இருந்து பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திருப்பரங்குன்றம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றனர்.

இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் சித்ராங்கதன், மாவட்டப் பொதுச் செயலாளர்கள் ஏ. எம். ராஜேஷ், கனல், ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ், மாவட்டத் துணைத் தலைவர்கள் இசக்கிமுத்து, சண்முகசுந்தரம், சிவராமன், காளிராஜா, மாசாணம், நவமணிகண்டன், சரஸ்வதி, மாவட்டச் செயலாளர் செல்வி, மண்டல் தலைவர்கள் சண்முகசுந்தரம், லிங்கசெல்வம், சங்கர், ஓ.பி.சி. மாநிலச் செயலாளர் பாலமுருகன், அணிப்பிரிவு மாவட்டத் தலைவர்கள் வெள்ளத்தாய், சக்திவேல், ஜெயக்குமார், ஓம்பிரபு உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.