திருநெல்வேலி சரக அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை, நவம்பர் 28) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில், திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களைப் பெற்றார்.

திருநெல்வேலி சரகத்திற்குட்பட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்களில் மொத்தம் 183 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.