அமோக வரவேற்பை பெற்ற வாராந்திர வேளாங்கண்ணி சிறப்பு ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம், நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் முக்கிய யாத்திரை தலங்களில் ஒன்றாகும். ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழா காலங்களில் தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில், இந்த ஆண்டும் திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் வழியாக வேளாங்கண்ணிக்கு இரண்டு சேவைகள் கொண்ட வாராந்திர சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் முதல் சேவை சனிக்கிழமை இயக்கப்பட்டது. பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவர் ஸ்ரீராம் செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது: கடந்த ஆண்டுகளில் நாகர்கோவிலிருந்து வேளாங்கண்ணிக்கு இயக்கப்பட்ட வாராந்திர சிறப்பு ரயில், போதிய காலஅவகாசம் இன்றி இயக்கப்பட்டதால் பயணிகளிடம் போதிய வரவேற்பைப் பெறாமல் இருந்தது. ஆனால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ரயிலின் காலஅட்டவணை கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்ட பயணிகளுக்கு மிகவும் பயனுள்ள வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் மொத்தம் 606 கி.மீ தூரத்தை, மணிக்கு 46 கி.மீ வேகத்தில், 16 நிறுத்தங்களுடன் 13:10 மணி நேரத்தில் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் மணிக்கு 50 கி.மீ வேகத்தில் பயணித்து 12 மணி நேரத்தில் இலக்கை அடைகிறது. இந்த ரயிலில் மூன்று குளிர்சாதன பெட்டிகளும், 11 இரண்டாம்வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள்; மற்றும் முன்பதிவில்லாத பெட்டிகளுடன் மொத்த இருக்கைகள் 984 ஆகும்.

இந்த ரயிலில் 29-08-2026 அன்று ரயில் நிலையம் வாரியாக அதிக பயணம் செய்த முதல் 10 ரயில் நிலையங்களின் விபரம்

திருவனந்தபுரம் - 186

திருவனந்தபுரம் வடக்கு – 163

நாகர்கோவில் டவுன் – 159

குழித்துறை –145

நெய்யாற்றின்கரை – 112

திருநெல்வேலி -62

வள்ளியூர் - 56

இரணியல் – 46

மதுரை -33

திண்டுக்கல் - 25

கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள ரயில் நிலையம் வாரியாக பயணிகள் விபரங்கள்

குழித்துறை- வேளாங்கண்ணி – 107

குழித்துறை – தஞ்சாவூர் - 21

குழித்துறை – நாகப்பட்டிணம் - 13

குழித்துறை – திருச்சி -4

இரணியல் - வேளாங்கண்ணி -34

இரணியல் - நாகப்பட்டிணம் -10

இரணியல் - தஞ்சாவூர் -1

இரணியல் - திருச்சி -1

நாகப்கோவில் டவுன் - வேளாங்கண்ணி -94

நாகப்கோவில் டவுன் - தஞ்சாவூர் -26

நாகப்கோவில் டவுன் - திருச்சி -20

நாகப்கோவில் டவுன் - நாகப்பட்டிணம் - 9

நாகப்கோவில் டவுன் - திண்டுக்கல் - 8

நாகப்கோவில் டவுன் - திருவாரூர் -2

வள்ளியூர் - வேளாங்கண்ணி -40

வள்ளியூர் - தஞ்சாவூர் -7

வள்ளியூர் - திருச்சி -4

வள்ளியூர் - நாகப்பட்டிணம் -3

வள்ளியூர் - திருவாரூர் -2

திருநெல்வெலி – வேளாங்கண்ணி -45

திருநெல்வெலி – நாகப்பட்டிணம் -7

திருநெல்வெலி –திருச்சி - 6

திருநெல்வெலி –மதுரை -2

வேளாங்கண்ணி பேராலயத் தமிழ் திருப்பலி நேரங்கள்: ஞாயிற்றுக்கிழமைகளில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் காலை 07:30 மணி ரூ நண்பகல் 12:00 மணி (கீழ் பேராலயம் தமிழ் திருப்பலிகள் நடைபெறுகிறது.

இந்த ரயிலில் பயணிக்கும் பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை 08:40 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடைவதால், மதியம் நண்பகல் 12:00 மணி தமிழ் திருப்பலிகளில் எளிதாகப் பங்கேற்க முடியும். ஞாயிறு மதியம் திருப்பலியில் பங்கேற்று விட்டு, இரவு 19:30 மணிக்கு மீண்டும் புறப்படும் அதே ரயிலைப் பிடித்து, திங்கட்கிழமை காலையிலேயே பணிக்கும் திரும்புவதற்கு ஏற்ற வகையில் அமைந்திருப்பதால் விடுமுறை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. எனத் தெரிவித்துள்ளார்.