முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான பல்வேறு சட்டப் போராட்டங்களைத் தாண்டி மகா தீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, தூத்துக்குடியில் வணிகர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர்.

வ.உ.சி. சந்தை மற்றும் சுற்று வட்டார வணிகர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் எஸ். வி. சந்தன் ராஜ் தலைமையில் பட்டாசு வெடிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி வெளிப்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் வ.உ.சி. சந்தை சுற்று வட்டார வியாபாரிகள் சங்கச் செயலாளர் செல்வராஜ், பொருளாளர் ரவிசேகர், துணைத் தலைவர் முருகேசன், சங்கப் பிரதிநிதி அருண் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் வணிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.