அமெரிக்காவில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் படிப்பை முடிக்கும் வரை அங்கு தங்கியிருக்க அனுமதிக்கும் விசா நடைமுறை பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், வெளிநாட்டினர் தங்குவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் டிரம்ப் நிர்வாகம் புதிய விசா கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தது. இதன்படி: வெளிநாட்டு மாணவர்களின் விசா காலம் அதிகபட்சமாக 4 ஆண்டுகள் என வரையறுக்கப்பட்டது.வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களின் விசா காலம் 240 நாட்களாகக் குறைக்கப்பட்டது.
இப்புதிய விதிகளால், 6 ஆண்டுகள் வரை நீடிக்கும் பி.எச்.டி (Ph.D) போன்ற உயர்கல்வி படிப்புகளை மேற்கொள்ளும் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் பாதியிலேயே அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் உருவாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
புதிய விசா கட்டுப்பாடுகள் அமலுக்கு வரவிருந்த நிலையில், இதனை எதிர்த்துப் பல்கலைக்கழகங்கள் அவசர வழக்கு தொடர்ந்தன. மனுவை விசாரித்த மாசசூசெட்ஸ் ஃபெடரல் நீதிமன்ற நீதிபதி, டிரம்ப் அரசின் இச்சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்தார்.
தனது தீர்ப்பில் நீதிபதி தெரிவித்த முக்கிய அம்சங்கள்:
இப்புதிய விசா கட்டுப்பாடு அமலுக்கு வந்தால் அமெரிக்காவின் உயர்கல்வித் துறைக்கும், பொருளாதாரத்திற்கும் பேரழிவு ஏற்படும்.
அரசை விமர்சிக்கும் வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களின் விசாகள் இச்சட்டத்தின் மூலம் மறுக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
நீதிமன்றத்தின் இந்த அதிரடித் உத்தரவைத் தொடர்ந்து, விசா முடக்க பயத்தில் இருந்த ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களும் பத்திரிகையாளர்களும் பெரும் நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.

