வருகிற 17ம் தேதி வியாழக்கிழமை அன்று 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த புனித விழாவில் கலந்து கொள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனால் தெற்கு ரயில்வே சார்பில் இதுவரை தூத்துக்குடிக்கு எந்த சிறப்பு ரயிலும் அறிவிக்கப்படவில்லை.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து மதுரைக்கு கடும் பயணிகள் நெரிசல் உள்ள நிலையில், சிறப்பு ரயில் இயக்காதது ஏமாற்றம் அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பக்தர்களின் வசதிக்காக உடனடியாக தூத்துக்குடி - மதுரை - தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று மதுரை கோட்ட ரயில்வே மேலாளருக்கும், தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கும் பயணிகள் நலச்சங்க செயலாளார் பிரம்மநாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

