தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி சோதனைச் சாவடி பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் சுந்தரம் தலைமையிலான காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்திச் சோதனையிட்டதில், அதில் விற்பனைக்காகத் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, புகையிலைப் பொருட்களைக் கடத்தி வந்த நபர்களிடம் விசாரணை நடத்தி ஏரல் புதுமனை பகுதியை சேர்ந்த ஆத்திப்பழம் மகன் ஆனந்தராஜ் (27) மற்றும் கொற்கை பகுதியை சேர்ந்த பிச்சைமுத்து மகன் வேல் உடையார் (35) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 30 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், ரொக்க பணம் ரூ.30,00 மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

