தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 17ஆம் தேதி காலை 10.00 மணியளவில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அறிவித்துள்ளார்.

2026-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான ‘விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” 17.09.2026 அன்று காலை 10.00 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் “முத்து அரங்கத்தில்” வைத்து நடைபெற உள்ளது.

எனவே தூத்துக்குடி மாவட்ட விவசாயப் பெருமக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தபட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.