தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி அருகேயுள்ள செம்பூர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் முத்து சசி (25). அதே ஊரைச் சேர்ந்த மாரியம்மாள் (70) என்பவர் காலமானதைத் தொடர்ந்து, அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக முத்து சசி அங்கே சென்றுள்ளார்.

அங்குப் பிரேதத்தைப் வைப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட 'ஃபிரீசர் பாக்ஸ்க்கு மின் இணைப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டபோது, எதிர்பாராத விதமாக முத்து சசி மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்டுப் பலத்த காயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டுச் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர், முத்து சசி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து ஆழ்வார்திருநகரி காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த இளைஞரின் உடல் உடற்கூறாய்வுக்காகச் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.