தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பனையடிப்பட்டி தொடக்கப் பள்ளியில் 2026-2028 ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் தேர்வு தலைமையாசிரியை விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது.
இதில் மேலாண்மைக் குழுவின் புதிய தலைவராக மகாராணி மற்றும் துணைத் தலைவராக சங்கரேஸ்வரி ஆகியோர் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இராமனூத்தூர் பள்ளித் தலைமையாசிரியர் இப்ராஹிம் தலைமையில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் இடைநிலை ஆசிரியை சாந்தி, மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

