தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்பிளாயீஸ் ஃபெடரேஷன் தூத்துக்குடி கிளை சார்பில் ITI முடித்து TNPSC தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கான உடல் தகுதி தேர்வு பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.

தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்பிளாயீஸ் ஃபெடரேஷன் தூத்துக்குடி மின் பகிர்மான கிளையின் சார்பில், ITI படித்து TNPSC எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்காக நடத்தப்பட்ட உடல் தகுதி தேர்வுக்கான பயிற்சியின் நிறைவு விழா இன்று (திங்கள்கிழமை) காலை சிட்டி டவர் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு அமைப்பு நிர்வாகி வில்சன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் N.D.S. அலெக்சாண்டர் மற்றும் மாவட்டப் பொருளாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றி வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளராகச் செல்வி பிஸ்மியா வில்சன் சிறப்பாகச் செயல்பட்டார்.

கடந்த பல மாதங்களாகத் தொடர்ச்சியாக மாணவர்களுக்குச் சிறப்பு உடல் தகுதிப் பயிற்சிகளை வழங்கி உறுதுணையாக இருந்த பயிற்றுநர்கள் நியூட்டன், குருசாமி மற்றும் கான்ஸ்டன் ஆகியோருக்கு அமைப்பின் சார்பில் பாராட்டுகளும் நன்றிகளும் தெரிவிக்கப்பட்டன. விழாவில் 90-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.