தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 6-ம் தேதி விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற அந்தோணியார் ராஜா என்ற மீனவர், எதிர்பாராத விதமாகக் கடலில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழந்த சக மீனவர் அந்தோணியார் ராஜாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவிக்கும் வகையில், தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் இன்று (நவம்பர் 9) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இன்று காலை மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 272 விசைப்படகுகள் வரிசையாக நிறுத்தப்பட்டு முடங்கியுள்ளன. இதற்கிடையே, தூத்துக்குடி விசைப்படகு தொழிலாளர்கள் சங்கம் சார்பில் உயிரிழந்த அந்தோணியார் ராஜாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.