தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம் கயத்தாறு கோட்டத்திற்குட்பட்ட 110/33-11KV சன்னது புதுக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக நாளை (10.11.2026 செவ்வாய்க்கிழமை) காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
கயத்தாறு, ராஜாபுதுக்குடி, டி.என். குளம், ஆத்திகுளம், தெற்கு இலந்தைகுளம், வடக்கு இலந்தைகுளம், சாலைப்புதூர், கைலாசபுரம், கீழக்கோட்டை, கொடியங்குளம், என். புதூர், நாரைக்கிணறு, புளியம்பட்டி, சவலாப்பேரி, பிராஞ்சேரி, இத்திக்குளம் மற்றும் சன்னது புதுக்குடி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
மேற்கண்ட பகுதிகளில் வசதி செய்யும் வகையில் மின் நுகர்வோர்கள் உரிய ஒத்துழைப்பு நல்குமாறு கயத்தாறு விநியோகப் பிரிவு உதவி செயற்பொறியாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

