தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் மற்றும் போலீசார் சிவந்தாகுளம் பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களைப் போலீசார் பிடித்து விசாரிக்க முயன்றனர்.

அப்போது, அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்துக் காட்டி போலீசாருக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். உடனடியாகச் சுதாரித்துக் கொண்ட போலீசார், சாதுரியமாகச் செயல்பட்டு அந்த 2 பேரையும் மடக்கிப் பிடித்தனர்.

பிடிபட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி சத்யாநகரைச் சேர்ந்த முனீஸ் என்ற சந்தோஷ் (20) மற்றும் நிஷாந்த் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த அரிவாளையும் பறிமுதல் செய்தனர்.