தூத்துக்குடியில் கடந்த 2013ம் ஆண்டு சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுந்தரவேல்புரம் பகுதியை சேர்ந்த முனியசாமி மகன் காளிமுத்து என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளான தூத்துக்குடி, டூவிபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் மகன் ராஜாமணி (35/26), நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரமோகன் மகன் சரத்பாபு குமார் (எ) சரத் (36/26), தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதியை சேர்ந்தவர்களான லட்சுமணன் மகன் சரவணன் (34/26) மற்றும் தங்கப்பாண்டி மகன் சந்தனகுமார் (34/26) ஆகிய 4 பேரையும் சிப்காட் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கின் விசாரணை ADJ - I நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மேற்படி நீதிமன்ற நீதிபதி தாண்டவம் இன்று (11.09.2026) மேற்படி எதிரிகளான ராஜாமணி, சரத்பாபுகுமார் (எ) சரத், சரவணன் மற்றும் சந்தனகுமார் ஆகிய 4 பேரையும் குற்றவாளிகள் என உறுதி செய்து அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.