பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு தூத்துக்குடி - ஆந்திர மாநிலம் நரசாபூர் இடையேயான சிறப்பு இரயில் சேவை வரும் நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 2ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.

தூத்துக்குடி - நரசாபூர் சிறப்பு இரயில் (எண்: 06019):

திங்கள்கிழமைகளில் தூத்துக்குடியில் இருந்து புறப்படும் இச்சிறப்பு இரயிலின் சேவை, செப்டம்பர் 28-ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், தற்போது வரும் அக்டோபர் 5-ஆம் தேதி முதல் நவம்பர் 30-ஆம் தேதி வரை மேலும் 9 சேவைகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

நரசாபூர் - தூத்துக்குடி சிறப்பு இரயில் (எண்: 06020):

புதன்கிழமைகளில் நரசாபூரில் (NS) இருந்து புறப்படும் இச்சிறப்பு இரயிலின் சேவை, செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், தற்போது வரும் அக்டோபர் 7-ஆம் தேதி முதல் டிசம்பர் 2-ஆம் தேதி வரை மேலும் 9 சேவைகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெற்கு இரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.