தூத்துக்குடி அருகேயுள்ள கூட்டாம்புளி பகுதியில் உள்ள 60 அடி ஆழமுள்ள கிணற்றில் நாய்க்குட்டி ஒன்று தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இது குறித்து ஊர் மக்கள் சிப்காட் தீயணைப்பு - மீட்புப் பணி நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு சிப்காட் நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் ஏட்டு இசக்கிராஜன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தவசி, ஜெயக்குமார், அஜித் ஆகியோர் விரைந்து வந்து கிணற்றுக்குள் இருந்த நாய்க் குட்டியை பாதுகாப்பாக மீட்டு பொது மக்களிடம் ஒப்படைத்தனர். தீயணைப்பு வீரர்களின் துரிதமான சேவையை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

