தூத்துக்குடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள வெள்ளத் தடுப்பு மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், வேளாண்மைத் துறை இயக்குநருமான கே.வி. முரளிதரன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

எதிர்வரும் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பேரிடர் மேலாண்மைத் தயார்நிலைகள் குறித்து இந்த ஆய்வின் போது கேட்டறியப்பட்டது.

மாநகராட்சி வளாகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள வெள்ளத் தடுப்பு உபகரணங்கள், மீட்புப் பணிகள் மற்றும் அவசரகாலப் பயன்பாட்டிற்கான கருவிகளின் செயல்பாடுகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா, மாவட்ட அலுவலர் கருணாகரன், உதவி மாவட்ட அலுவலர்கள் நட்டார் ஆனந்தி, கோமதி அமுதா, தூத்துக்குடி நிலைய நிலைய அலுவலர் சிவானந்த ராம் கோகுல் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.