தியாகி இம்மானுவேல் சேகரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் உள்ள பாரதியார் பேருந்து நிலையம் முன்பு அவரது திருவுருவப் படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. இப்படத்திற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரும், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினருமான ஜி.வி. மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் திமுக நகரச் செயலாளர் வேலுச்சாமி, முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் நடராஜன், திமுக வடக்கு மாவட்டக் கலை இலக்கிய அணித் துணை அமைப்பாளர் ஆவுடையப்பன், வார்டு செயலாளர் மாரிராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். நினைவு தின ஏற்பாடுகளை விளாத்திகுளம் தாலுகா தேவேந்திரகுல வேளாளர் நலச் சங்கத்தினர் செய்திருந்தனர்.