பொதுமக்கள் தங்கள் கட்டிடங்களுக்கான சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரியினங்களை எவ்வித தாமதமுமின்றி உடனடியாகச் செலுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வரிகளைப் பின்வரும் வழிகளில் எளிதாகச் செலுத்தலாம்:

மாநகராட்சியின் கணினி வரி வசூல் மையங்கள் (Computerized Collection Centers)

கியூ.ஆர் கோடு (QR Code) மூலம் நேரடியாகச் செலுத்தும் வசதி

இணையதளம் வாயிலாகச் செலுத்த www.tnurbanepay.tn.gov.in என்ற முகவரியைப் பயன்படுத்தலாம்.

பொதுமக்கள் சிரமமின்றி வரி செலுத்துவதற்கு வசதியாக, அரசு பொது விடுமுறை நாட்களைத் தவிர்த்து அனைத்துச் சனிக்கிழமைகளிலும் மாநகராட்சி கணினி வரி வசூல் மையங்கள் காலை 9.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் கடைசி நேர நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வரிகளைச் செலுத்தி மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.