தூத்துக்குடி திருவைகுண்டம் அருகே கல்லூரி மாணவர் இசக்கி ராஜா வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், சாத்தான்குளம் படுகொலைச் சம்பவத்தின் ரத்தம் காய்வதற்குள் தூத்துக்குடியில் அடுத்த படுகொலை நிகழ்ந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், அரிவாள் வெட்டு, சிறுமிகள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் சம்பவங்களால் மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கு நிலை நாளுக்கு நாள் சீரழிந்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து தினந்தோறும் சுட்டிக்காட்டியும் அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்து வருவதாக விமர்சித்துள்ள கனிமொழி எம்.பி., மக்களின் பாதுகாப்புடன் விளையாடுவதைத் தவெக அரசு நிறுத்திக்கொண்டு, குற்றச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்

