தூத்துக்குடி குமாரர் தெருவைச் சேர்ந்தவர் அய்யம்பெருமாள் மகன் மாடசாமி என்ற யோகீஸ்வரர் (63). இவர் கடந்த 6ஆம் தேதி மாலை 06.45 மணியளவில் தூத்துக்குடி காமராஜ் மார்க்கெட் சிக்னல் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது.
இந்த விபத்தில் காயமடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 03.30 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தூத்துக்குடி மத்திய காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

