தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஜோதி நகர் பகுதியில் ஆயிரக்கணக்கான வீட்டுமனைகள் உள்ளன. இப்பகுதியின் பிரதான சாலையாக விளங்கும், எட்டயபுரம் பைபாஸ் சாலையை இணைக்கும் 80 அடி சாலை, கடந்த 10 ஆண்டுகளாகப் போடப்படாமல் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது.

குண்டும் குழியுமாகக் காணப்படும் இந்த சாலையால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் தினசரி பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறுவதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, இந்த 80 அடி சாலையைச் சீரமைத்து புதிய தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜோதி நகர் பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.