தூத்துக்குடியில் உள்ள சத்யா ரிசார்ட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், 22 ஆண்டுகளுக்கு முன்பு படித்துப் பல்வேறு துறைகளிலும் ஊர்களிலும் பணிபுரிந்து வரும் 80-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் அப்பள்ளியில் பணியாற்றிய 20-க்கும் மேற்பட்ட முன்னாள் ஆசிரியர்கள் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். அவர்களுக்கு மாணவர்கள் பொன்னாடை போர்த்தி, நினைவளித்துத் தங்களது நன்றியையும் மரியாதையையும் தெரிவித்து ஆசி பெற்றனர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்களது சக பள்ளித் தோழர்களையும், தங்களுக்குப் போதித்த ஆசிரியர்களையும் நேரில் கண்ட மாணவர்கள், தங்களது பழைய பள்ளிப் பருவ நினைவுகளையும் சுவாரஸ்யமான அனுபவங்களையும் பகிர்ந்து மகிழ்ந்தனர்.