தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (நவ. 16) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து ஆட்சியர் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.
பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, மகளிர் உரிமைத்தொகை, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை மற்றும் இதர பல்வேறு மனுக்கள் என 487 மனுக்களும், மூத்த குடிமக்களிடமிருந்தும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 14 மனுக்களும், மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து அவர்களிடமிருந்து 45 மனுக்கள் என மொத்தம் மனுக்கள் 546 பெறப்பட்டது.
மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், மனுக்களின் மீது உரிய விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மூ. குருச்சந்திரன், தனித்துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) பிர்தௌஸ் பாத்திமா, ஊராட்சிகள் உதவி இயக்குநர் சாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி மற்றும் அனைத்துத் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

