தசரா திருவிழா மற்றும் தொடர் விடுமுறையைக் முன்னிட்டு, பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் பெங்களூரு கன்டோன்மென்ட் மற்றும் தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு கன்டோன்மென்ட் - தூத்துக்குடி (ரயில் எண்: 06533): இச்சிறப்பு ரயில் அக்டோபர் 16-ம் தேதி (வெள்ளிக்கிழமை) பெங்களூரு கன்டோன்மென்ட் நிலையத்திலிருந்து புறப்பட்டு, மறுநாள் (அக். 17) மதியம் 12:30 மணிக்குத் தூத்துக்குடி வந்தடையும்.
மறுமார்க்கத்தில் இச்சிறப்பு ரயில் அக்டோபர் 17-ம் தேதி (சனிக்கிழமை) பிற்பகல் 15:30 மணிக்குத் தூத்துக்குடி நிலையத்திலிருந்து புறப்பட்டு, மறுநாள் (அக். 18) அதிகாலை 05:30 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட் சென்றடையும்.
இந்த ரயில் தூத்துக்குடி மேலூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர் ஜங்ஷன், மதுரை ஜங்ஷன், திண்டுக்கல் ஜங்ஷன், கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, ஓசூர், பெங்களூரு கன்டோன்மென்ட் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்தச் சிறப்பு ரயில் சேவையைத் தென் மாவட்டப் பயணிகள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

