பிரபுதேவா மற்றும் ஏ.ஆர். ரகுமான் கூட்டணியில் உருவாகியுள்ள 'மூன் வாக்' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

அறிமுக இயக்குநர் மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இயக்கியுள்ள இப்படத்தில் பிரபுதேவாவுடன் இணைந்து யோகிபாபு, அர்ஜுன் அசோகன், அஜு வர்கீஸ், யூடியூப் பிரபலம் சதீஷ், நிஷ்மா செங்கப்பா, சுஷ்மிதா நாயக், மொட்டை ராஜேந்திரன், சுவாமிநாதன், ரெடின் கிங்ஸ்லி, தீபா சங்கர், சந்தோஷ் ஜேக்கப், ராம்குமார் நடராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மேலும், ஏ.ஆர். ரகுமான் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். பிஹைன்ட்வுட்ஸ் நிறுவனம் சார்பில் மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன், திவ்யா மனோஜ், பிரவீன் இலக் ஆகியோர் இணைந்து படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் டிச.24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.