தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் தேங்காய் பண்டகசாலைப் பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார் (29), தொழிலாளி. இவர் கடந்த 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி அதிகாலை, அப்பகுதியில் வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த 41 வயது பெண்ணுக்குப் பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஆறுமுகனேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவவழக்கை விசாரித்த நீதிபதி முருகன், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து, குற்றவாளி ராம்குமாருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்துத் நேற்று தீர்ப்பளித்தார்.

மேலும், அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக 3 மாதங்கள் கடுங்காவல் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் மினிலா ஆஜராகி வாதிட்டார்.