திருநெல்வேலி மாவட்டம், வாகைக்குளம் நடுவர்குறிச்சியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சங்கரன் (70). மாற்றுத்திறனாளியான இவர் நேற்று தனது மூன்று சக்கர சைக்கிளில் வசவப்பபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். சென்னல்பட்டி கழுங்கள் பாலத்தில் சென்றபோது எதிர்பாராதவிதமாகத் 12 அடி பள்ளத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.
இவ்விபத்தில் பலத்த காயம் அடைந்த அவர், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்குத் தீவிர சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து முறப்பநாடு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

