தூத்துக்குடி மாநகர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தியதைக் கண்டித்தும், மகளிருக்கான இடஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்தக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் விமல் வங்காளியார் தலைமை தாங்கினார். மாநிலப் பொறுப்பாளர் மதுரை மாலின் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுக் கண்டன உரையாற்றினார்.

இதில் மாநிலத் துணைச் செயலாளர் தமிழ்க்குட்டி, மண்டலச் செயலாளர் அரசூர் ராஜ்குமார், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செந்தில்வேல் குமார், மாவட்டப் பொருளாளர் வின்சன், இளம் சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாவட்டச் செயலாளர் வனிதா, துணைச் செயலாளர்கள் மாரிமுத்து, பாபு, செல்வம், தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் ரவிக்குமார், மேற்குப் பகுதிச் செயலாளர் சித்திரை விஜயன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.