தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் புகைப்படப் பிரிவில், திருநெல்வேலி காவல் சரக துணைத் தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது, புகைப்படப் பிரிவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், பயன்படுத்தப்பட்டு வரும் புகைப்படக் கருவிகள், பதிவேடுகள் மற்றும் ஆய்வுக் குறிப்புகள் ஆகியவற்றை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, பணிகளை மேலும் சிறப்பாக மேற்கொள்வது குறித்து அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
இந்த ஆய்வின் போது, திருநெல்வேலி மாநகர துணை ஆணையர் மற்றும் தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) சரவணன் உடனிருந்தார்.

