கோவில்பட்டி ரோட்டரி சங்கம்,நெல்லை, கோவில்பட்டி அரவிந்த் கண் மருத்துவமனைகள் சார்பில் கோவில்பட்டி அரவிந்த் கண் மருத்துவமனையில் சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.

கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் முத்து முருகன் தலைமை வகித்தார். நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் மீனாட்சி,ரோட்டரி மாவட்ட முன்னாள் உதவி ஆளுநர்கள் ஆசியாபார்ம்ஸ் பாபு, சீனிவாசன்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோவில்பட்டி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவ அலுவலர் சுகன்யா அனைவரையும் வரவேற்றார். கோவில்பட்டி உதவி காவல் கண்காணிப்பாளர் நீல் சர்மா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இலவச கண் பரிசோதனை முகாமினை துவக்கி வைத்தார்.

நீரிழிவு சிறப்பு மருத்துவர் சுபாஷனி சர்க்கரை நோயும் கண் பாதிப்பும் எனும் தலைப்பில் கருத்துரை வழங்கினார். இலவச கண் பரிசோதனை முகாமில் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர்.

இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் நாராயணசாமி,ரவி, மாணிக்கம், கண்ணன், ராஜ்குமார், மாரியப்பன், முத்துகிருஷ்ணன், செவிலியர்கள் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ரோட்டரி சங்க செயலாளர் ரமேஷ் குமார் நன்றி கூறினார்.