முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஓன்றான திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றிட பல்வேறு சட்ட போராட்டங்களை தாண்டி மகாதீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து வ.உ.சி சந்தை, சுற்று வட்டார வணிகர்கள் சங்கம் சார்பாக அதன் தலைவர் எஸ். வி சந்தனராஜ் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் வ.உ.சி.சந்தை சுற்று வட்டார வியாபாரிகள் சங்க செயலாளர் செல்வராஜ், பொருளாளர் ரவிசேகர், துணை தலைவர் முருகேசன், சங்க பிரதிநிதி அருண் குமார் மற்றும் வணிகர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.