மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படவுள்ள SSC-CHSL மற்றும் வங்கிப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் அரசுத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு பல்வேறு போட்டித்தேர்வுகளை நடத்துகிறது.

2026ஆம் ஆண்டு பணியாளர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ள ஆண்டு திட்ட நிரலின் படி SSC-CHSL தேர்வு விரைவில் வெளியாகும் என அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. IBPS RRB(OA) போன்ற வங்கி தேர்வுகளுக்கும் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களை https://ssc.gov.in/, https://www.ibps.in/ என்ற இணையதளத்தில் அறியலாம்.

இத்தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் பொருட்டு திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வைத்து ஒருங்கிணைந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 05.10.2026 (திங்கட்கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பு திறன் வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு Smart Board வசதியுடன் நடத்தப்படுகிறது. வாரந்தோறும் மாதிரி தேர்வுகளும் மற்றும் மாநில அளவிலான முழு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். போட்டித் தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் அலுவலக நூலகத்தில் உள்ளன.

இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள திருவனந்தபுரம் ரோடு, ரயில்வேகேட் அருகில், குலவணிகர்புரம், பாளையங்கோட்டையில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்திற்கு 05.10.2026 அன்று காலை 10.30 மணிக்கு Passport Size புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் நேரில் வருமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

மேலும் தகவல்களுக்கு 9499055929 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் மற்றும் NELLAI EMPLOYMENT OFFICE என்ற TELEGRAM CHANNEL-இல் இணைந்து பயிற்சி குறித்த தகவல்களை பெறலாம் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளார்.