நாசரேத் டென்னிசன் கராத்தே பள்ளியில் மாணவர்களுக்கு தற்காப்பு கலையான கராத்தே பயிற்சி அளித்து வருகிறது. இப் பள்ளி மாணவ மாணவிகள் ஆறுமுகநேரியில் நடைபெற்ற 18வது மாநில அளவிலான ஊரக விளையாட்டு போட்டிகளில் பங்குபெற்று கராத்தே போட்டியில் வெற்றி பெற்று தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றனர் .
நாசரேத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழக வெற்றி கழகத்தின் நாசரேத் நகரச் செயலாளர் சுதர்சன் மற்றும் மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் விஜய் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் கொடுத்து வாழ்த்துரை வழங்கினர். மாநில அளவில் மாணவ, மாணவியர் வெற்றி பெற பயிற்சி அளித்த கராத்தே மாஸ்டர் டென்னிசனை அனைவரும் பாராட்டினர்.

